பள்ளியில் நடத்தப்பட்ட குத்துபாடல் நிகழ்ச்சியால் சர்ச்சை

2034பார்த்தது
மதுரை மாநகர் மேல பொன்னகரம் பகுதியில் அமைந்துள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் திமுக சார்பில் பத்தாயிரம் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியானது. இதில் நிகழ்ச்சி நடைபெறும் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கும், மேயர் இந்திராணியும் கலந்து கொள்ளாத நிலையில் அமைச்சர் மூர்த்தி தலைமையில் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக அரசு உதவி பெறும் பள்ளி வளாகத்தில் குத்துபாடல்களுக்கு பெண் கலைஞர்களின் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. அப்போது மதுபோதையில் ஆடையை அகற்றும் வகையில் ஆட்டம் ஆட அதனை பார்த்த பெண்கள் அங்கிருந்து பதறி அடித்து ஒடினர். இதனையடுத்து காவல்துறையினர் அவரை அமரவைத்தனர். இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பொதுமக்களுக்கு பெட்சீட் வழங்கியபோது அந்த பகுதி முழுவதும் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வாளகத்தில் நடைபெறும் போது எதற்கு இது போன்ற ஆடல் பாடல் என பொதுமக்களே கேள்வி எழுப்பும் வகையில் நலத்திட்ட உதவிகளுக்கு வாங்க வந்த பொதுமக்களை ஆடல் பாடல் நிகழ்ச்சிக்காக நீண்ட நேரம் காத்திருக்க வைத்தனர். நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என்ற பெயரில் ஆடல் பாடல் நிகழ்ச்சியை பள்ளி மாணவர்கள் முன்பாக நடத்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்தி