மதுரை மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் மாணவிகள் செயற்கைக்கான கலந்தாய்வு வரும் 10-ம் தேதி தொடங்குவதாக கல்லூரி முதல்வர் வானதி நேற்று தெரிவித்துள்ளார்.
மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் 2024 2025 ஆம் ஆண்டுக்கான இளநிலை படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு வருகிற 10, 12 13, ஆம் தேதி ஆகிய மூன்று நாட்கள் தினமும் காலை 9 மணிக்கு கல்லூரி கயல் அரங்கத்தில் தொடங்கி நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.
மாணவிகள் இந்த மூன்று நாட்கள் கலந்தாய்வில் பங்கேற்க கல்லூரி முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்.