மதுரை: அமித்ஷாவை கண்டித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

82பார்த்தது
மதுரை: அமித்ஷாவை கண்டித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்
மதுரை- அழகர்கோவில் சாலையில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு கட்சியின் மாநகர மாவட்டத் தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். வடக்கு மாவட்டத் தலைவர் ஆலாத்தூர் ரவிச்சந்திரன், தெற்கு மாவட்டத் தலைவர் அம்மாபட்டி பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மக்களவை உறுப்பினர் விஸ்வநாதன் கோரிக்கைகள் குறித்துப் பேசினார். அம்பேத்கர் உருவச் சிலைக்கு மாலை அணிவித்த பின்னர், அங்கிருந்து ஊர்வலமாகப் புறப்பட்ட காங்கிரஸ் கட்சியினர் காந்தி நினைவு அருங்காட்சியக வளாகத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்தனர். 

பின்பு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்துக்கு மாவட்ட ஆட்சியர் மா. சௌ. சங்கீதாவிடம் மனு அளிப்பதற்காக வந்தனர். ஆனால், மாவட்ட ஆட்சியர் பிற அலுவல் பணியில் இருந்ததால் உதவி ஆட்சியரிடம் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், காங்கிரஸ் கட்சியினர் இதை ஏற்க மறுத்துவிட்டனர். நீண்ட பேச்சுவார்த்தைப் பின்னர் அனுமதிக்கப்பட்டனர். மத்திய அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை மதுரை மாவட்ட ஆட்சியர் மா. சௌ. சங்கீதாவிடம் கட்சியினர் அளித்தனர். 

சட்டமேதை அம்பேத்கர் குறித்து இழிவாகப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர மாவட்டக் குழு சார்பில், நேற்று (டிசம்பர் 24) ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி