தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

72பார்த்தது
மத்திய மாநில அரசுகள் சாதிவாரி கணக்கெடுப்புகளை நடத்தி விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு, வேலைவாய்ப்பு அரசின் சலுகைகளை வலியுறுத்தியும் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை சார்பில் அதன் நிறுவனர் தனியரசு தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள திருவள்ளுவர் சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று சாதிவாரி கணக்கெடுத்து நடத்த கோரி மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன பதாகைகளை ஏந்தியவாறு முழக்கங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய தனியரசு:


மாநில அரசாங்கமே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கு முழு அதிகாரம் உள்ளபோது ஸ்டாலின் அரசு உடனடியாக தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும், ஒன்றிய மோடி பாஜக அரசு இந்திய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் , எங்களது அமைப்பு சார்பாக தமிழ்நாடு முதலமைச்சர் நேரில் சந்திக்க உள்ளோம் நியாயமான கோரிக்கைகளை ஸ்டாலின் அரசு உடனடியாக ஏற்றுக்கொண்டு கணக்கெடுப்பை நடத்த வேண்டும், இரண்டு தினங்களுக்கு முன்பு தெலுங்கானாவில் சாதிவாரி கணக்கு எடுக்க தொடங்கியுள்ளனர். ஆனால் தமிழ்நாட்டில் ஸ்டாலின் அரசு மத்திய அரசை காரணம் கூறி மடைமாற்றி கவனம் செலுத்தாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. இந்த ஏமாற்றத்தை தொடர்ந்து அனுமதிக்க மாட்டோம் என்றார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி