மதுரை மாநகரில் திறம்பட செயல்பட்ட காவல் அதிகாரிகளை காவல் ஆணையர் பாராட்டினார்
குற்ற வழக்குகள் மற்றும்
போக்குவரத்து பிரிவில் திறம்பட செயல்பட்ட 14 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கு காவல் ஆணையர் லோகநாதன் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கி பாராட்டுக்கள் தெரிவித்தார். இதில் லோக் அதாலத்தில் அதிக எண்ணிக்கையிலான வழக்குகளை தீர்த்து வைத்த மத்திய குற்ற பிரிவு ஆய்வாளர் வீரம்மாள், CCPS சார்பு ஆய்வாளர் ராஜா, CRB சிறப்பு சார்பு ஆய்வாளர் துரைசாமி, வாகனச் சோதனையின் போது கொலைக் குற்றவாளியை பிடித்து சட்டம் மற்றும் ஒழுங்கு காவல்துறையிடம் ஒப்படைத்த தல்லாகுளம்
போக்குவரத்து ஆய்வாளர் சுரேஷ், குற்றவாளியை விரைவாக கண்டுபிடித்து அவர்களிடமிருந்து திருடுபோன சொத்துக்களை மீட்ட மாட்டுத்தாவணி (குற்றம்) சார்பு ஆய்வாளர் சுந்தரேசன், கோவில் (குற்றம்) சிறப்பு சார்பு ஆய்வாளர் கதிர்வேல், தல்லாகுளம் தலைமை காவலர் ஆண்டிராஜ், செல்லூர் (குற்றம்) தலைமை காவலர் செல்வகுமார், தல்லாகுளம் (குற்றம்) முதன்மை காவலர் சதீஷ்குமார், மதிச்சியம் (குற்றம்) முதன்மை காவலர் அன்புவேல்,
போக்குவரத்து பிரிவில் சிறப்பாக செயல்பட்ட கரிமேடு
போக்குவரத்து சார்பு ஆய்வாளர் தார்ஜுஸ், கொலை குற்றவாளியை விரைவாக கைது செய்த C5- கரிமேடு (ச&ஒ) சார்பு ஆய்வாளர் நவீன் சார்லஸ், தலைமை காவலர் செந்தில்குமார், தலைமை காவலர் ஜார்ஜ் டேமிட்ரோ ஆகியோர் பரிசுகள் பெற்றனர்.