மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மானிய கோரிக்கையில் 'அரசு போட்டித் தேர்வுகளில் பங்கேற்க மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்க, ஆண்டுதோறும் 200 பேருக்கு உணவு, தங்கும் விடுதியுடன் இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள் முதற்கட்டமாக சென்னையில் துவக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதை நடைமுறைப்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் செப். 14 ல் நடத்தப்பட. ள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 2, 2 ஏ தேர்வில் அதிகமான மாற்றுத் திறனாளிகள் தேர்ச்சி பெற ஏதுவாக சிறப்பு பயிற்சி முதற்கட்டமாக 100 பேருக்கு அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சி சென்னை மயிலாப்பூர் சாந்தோம் ஹைரோட்டில் உள்ள சி. எஸ். ஐ. , காதுகேளாதோருக்கானமேல்நிலைப் பள்ளியில் நடக்க உள்ளது. விருப்பம் உள்ளவர்கள், ஜூலை 29 க்குள் அந்தந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது scdaplacement@gmail. com என்ற மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். இயலாத சூழலில் அம்மையத்திற்கு நேரில் சென்றும் விண்ணப்பித்து சேரலாம்.