மலைவேடன் இனச்சான்று வழங்கக் கோரி: மனு

59பார்த்தது
மலைவேடன் இனச்சான்று வழங்கக் கோரி: மனு
மலைவேடன் இனச்சான்று வழங்கக் கோரி: மனு

மதுரை: மலைவேடன் இனச் சான்று வழங்கக் கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று அச்சமூகத்து மக்கள் மனு அளித்தனர்.

தமிழ்நாடு மலைவேடன் முன்னேற்ற சங்கம் சார்பில் மாநிலத் தலைவர் ஏ. ஜி. ராஜாஜி, மாநிலச் செயலாளர் ஏ. தினேஷ் பாபு, மாநிலப் பொருளாளர் எம். ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

எங்களுக்கு மலைவேடன் இனச்சான்று வழங்கக்கோரி 1972-ம் ஆண்டு முதல் 50 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறோம். இச்சான்று பெறமுடியாமல் 8, 10-ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாமல் எங்கள் சமுதாயத்தினர் உள்ளனர். தற்போது 8, 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களும் சான்றிதழ் பெற முடியாமல் அரசு நலத்திட்டங்களை பெற முடியாமல் சிரமப்படுகின்றனர்.

தொடர்புடைய செய்தி