மதுரை உணவகத்தில் சிக்கன் 65க்குள் வண்டு: மாணவிகள் புகார்
மதுரையில் உணவகத்தில் வாங்கிய சிக்கனில் வண்டு இருந்ததால் அதிர்ச்சியடைந்த சட்டக் கல்லூரி மாணவிகள் உணவு பாதுகாப்புத்துறை அலுவலகத்திற்கு புகார்
மதுரை கேகே நகர் பகுதியில் பிஸ்மி உணவகம் என்ற பெயரில் செயல்பட்டுவரும் ஹோட்டலில் சட்டக்கல்லூரி மாணவிகள் சிலர் நேற்று இரவு பார்சலில் சிக்கன் வாங்கியுள்ளனர்.
அதனை சாப்பிடுவதற்காக எடுத்து சென்று பிரித்துப் பார்த்தபோது அந்த சிக்கன் 65க்குள் வண்டு இருப்பது போல தெரிய வந்துள்ளது
இதனால் சந்தேகமடைந்து சிக்கனை பிரித்து உள்ளே பார்த்தபோது சிறிய அளவிலான வண்டு இறந்து கிடப்பது தெரியவந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகள் சிக்கனில் வண்டு இருப்பதாக கூறி உணவகத்திற்கு நேரடியாக எடுத்து வந்து உணவக ஊழியர்களிடம் கேட்டபோது முறையான பதில் அளிக்கவில்லை
இதனை அடுத்து சட்டக் கல்லூரி மாணவிகள் சிக்கனில் வண்டு இருப்பது தொடர்பாக வீடியோ ஆதாரத்துடன் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்கு whatsapp ஆப் மூலமாக புகார் அளித்துள்ளனர்.
இது தொடர்பாக புகார் ஏற்றுக் கொண்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் இன்று உணவகத்தில் சோதனை நடத்த உள்ளதாக தெரிவித்தனர். மேலும் உணவகத்தில் நேரடியாக விசாரணை மேற்கொள்ளும் போது வண்டு இருப்பது உறுதியானால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.