மதுரை: பெண் காவலர்களை இழிவாக பேசியதாக பிரபல யூடியூப்பர் சவுக்கு சங்கர் தேனியில் கைதான போது கஞ்சா வைத்திருந்ததாக பிசி பட்டி போலீசார் பதிவு செய்த வழக்கில் இன்று சவுக்கு சங்கர் சென்னை சிறையில் இருந்து மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வீடியோ கான்பிரென்சிங் மூலம் நீதிபதி முன் இன்று ஆஜர் ஆனதைத் தொடர்ந்து ஜூன் 19ஆம் தேதி வரை பிரபல யூடியூப்பர் சவுக்கு சங்கரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி செங்கமலச்செல்வன் உத்தரவிட்டார்.