மதுரை அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் 1443 பசலி மாசி திருவிழா கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது.
இதனை தொடர்ந்து இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேரோட்டதை முன்னிட்டு சாலை நெடுகிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர் அதிகளவில் பெண்கள் வழிபட்டனர்.