ஆலமரத்திற்கு 105வது பிறந்தநாள் கொண்டாடம்

69பார்த்தது
ஆலமரத்திற்கு 105வது பிறந்தநாள் கொண்டாடம்
ஆலமரத்திற்கு 105வது பிறந்தநாள் கொண்டாடம்

மதுரை மீனாம்பாள்புரம் ஆலமரத்திடலில் நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்கம், பொது நல அறக்கட்டளை சார்பில் ஆலமரத்திற்கு 105வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. நீர்நிலைகள் அமைப்பின் நிறுவனர் அபுபக்கர் தலைமை வகித்தார்.

அழகுதனராஜ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக காமராஜ் பல்கலை தொடர்பியல் துறை பேராசிரியர் நாகரத்தினம் பங்கேற்றார். அவர் பேசியதாவது: ஒவ்வொரு ஆண்டும் இந்த ஆலமரத்தின் விழுதுகள் வெட்டப்பட்டுள்ளதா என கண்காணித்து கொண்டு வருகிறோம். இதனை பாதுகாக்க 'ட்ரோன்' மூலமாக கண்காணித்து ஆவணப்படுத்தலாம். மரங்கள் பாதுகாப்பு என்பது நகர்மயமாதலில் ஏற்பட்டுள்ள இடற்பாடுகளை அகற்றுவதற்கும், குறைந்தபட்சமாக இயற்கையை காப்பாற்றுவதற்கும் இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி அவசியம்.

இந்த மரத்தை பாதுகாக்க அதனை சுற்றி மேடை அமைக்க வேண்டும் என்றார். வழக்கறிஞர் ஜமாலுதீன், ஜெயக்குமார், இன்பராஜா, கண்ணன் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி