ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் பிரம்மோற்சவம் தொடர்பான வழக்கு

77பார்த்தது
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜேந்திரன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் மிகவும் பழமையானது. ஸ்ரீ ராமநாதசுவாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா 10 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படும். ஆனி மாதத்தில் விழா கொண்டாடப்படும். இந்த ஆண்டு 3 நாட்கள் மட்டுமே திருவிழா கொண்டாடப்படுவதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே, பிரம்மோற்சவ திருவிழாவை 10நாட்கள் கொண்டாட உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, பிரம்மோற்சவம் திருவிழாவை 10 நாட்கள் நடத்த இயலுமா? என்பது குறித்து கோயில் நிர்வாகம் பதில்தர நீதிபதிகள் எஸ். எம். சுப்பிரமணியம், மரிய கிளாட் அமர்வு உத்தரவிட்ட நிலையில், வழக்கின் விசாரணையை நாளை ஒத்திவைத்தனர். இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அடுத்த ஆண்டு முதல் 10 நாட்கள் நடக்கும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பு விளக்கத்தை ஏற்ற ஐகோர்ட் கிளை மனுவை முடித்து வைத்தது. மேலும், அடுத்த ஆண்டு பிரம்மோற்சவம் நடத்துவது தொடர்பாக கோயில் நிர்வாகம் சார்பில் அறிக்கை தரவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி