மதுரை: கஞ்சா கடத்தல் வழக்கு; 7 பேருக்கு சிறை

60பார்த்தது
மதுரை: கஞ்சா கடத்தல் வழக்கு; 7 பேருக்கு சிறை
கடந்த 2023ம் ஆண்டு தேனி கோடாங்கிபட்டி பகுதியில் வணிகரீதியாக 24 கிலோ கஞ்சாவை கடத்தி விற்பனை செய்த வழக்கில் தேனியை சேர்ந்த சந்திரா, சரஸ்வதி, அஜித், சுமித்ரா, சாந்தி, அங்குதாய், ஆரோக்கியசாமி உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

விசாரணை நிறைவடைந்த நிலையில் கஞ்சா கடத்திய சந்திரா 2வருட சிறைத்தண்டனையும், சரஸ்வதி, அஜித், ஆரோக்கியசாமி ஆகியோருக்கு 1வருட சிறைத்தண்டனையும், சுமித்ராவுக்கு 5வருட சிறைத்தண்டனையும், சாந்தி, அங்குதாய் ஆகியோருக்கு 3வருட சிறைத்தண்டனையும் விதித்து நீதிபதி ஹரிஹரகுமார் உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி