மதுரையில் இன்று தமிழ்நாடு இருசக்கர வாகன பழுது பார்ப்போர் முன்னேற்ற சங்கங்களின் கூட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ள மதுரை நியூஸ் இருசக்கர மோட்டார் மெக்கானிக் தொழிலாளர் சங்கத்தின் 20-ம் ஆண்டு விழா நடைபெற்றது.
விழாவில் மாநில அளவில் கல்விக்கான ஊக்கத்தொகை மற்றும் மதுரை அளவிலான நலிந்தோருக்கு நலத்திட்ட உதவிகளை வணிகவரி மற்றும் பத்திர பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி நிகழ்ச்சியில் பங்கேற்று வழங்கினார்.
இந்த இருபதாவது ஆண்டு விழாவில் சங்கத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஏராளமான பங்கேற்றனர்.