மதுரை ஆனையூர் பகுதியை சேர்ந்த நிலா என்ற பெயரில் அதே பகுதியில் உணவகம் அன்று நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் உணவகத்திற்கு சில திருநங்கைகள் சங்கத்தினர் வருகை தந்து தங்களுக்கு பணம் தர வேண்டும் என கேட்டு மிரட்டுவதாகவும் சங்கத்தில் இருந்தால் மட்டுமே உணவகம் நடத்த விடுவோம் என மிரட்டுவதாகவும் கூறி மதுரை கூடல்நகர் காவல் நிலையம் மற்றும் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் புகார் மீது காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தொடர்ச்சியாக திருநங்கையின் சங்கத்தினர் சிலர் தனது உணவகத்திற்கு இடையூறு தருவதாக கூறி இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கை நிலா தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்களிக்க முயன்றார்.
இதனையடுத்து அந்த பகுதியில் இருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி அனுப்பி வைத்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் நடைபெற்ற போது திடீரென திருநங்கை உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
திருநங்கை நிலா:
காவல்துறையினரிடம் பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில் தொடர்ச்சியாக நடத்தும் உணவகத்திற்கு இடையூறு செய்யப்படுகிறது. எனவே மாவட்ட ஆட்சியரை சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளிப்பதற்காக வந்ததாக தெரிவித்தார்.