மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பூர் செல்லும் அரசு பேருந்து ஆரப்பாளையம் ரவுண்டானா அருகே பயணிகளை ஏற்றியவாறு நின்று கொண்டிருந்தது.
தாராபுரம் கிளை ஓட்டுநர் கணேசனை கடுமையாக திட்டியபடி உதவி மேலாளர் மாரிமுத்து அலுவலகத்திற்குள் அழைத்துச் சென்று தனது செருப்பால் அடித்து கோபத்தை வெளிப்படுத்தினார். நீ என்ன பயணிகளை வைத்து தூண்டி விடுகிறாயா என கூறியபடி செருப்பால் அடித்த நிலையில் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் அதிகாரி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அரசு பேருந்து ஓட்டுநர்கள் சங்கத்தினரும் பயணிகளும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து தமிழக முழுவதிலும் போக்குவரத்து தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் நேற்று இரவு ஓட்டுநரை தாக்கிய மேலாளர் மாரிமுத்து மன்னிப்பு கோரி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் நான் நடந்து கொண்டது தமிழக அரசுக்கும் போக்குவரத்து துறைக்கும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது, என்பதை முழுமையாக உணருகிறேன் எனவும். அதேசமயம் நடந்த தவறுக்கு ஓட்டுநர் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்கள் அனைவரிடமும் நான் மன்னிப்பை கூறிக் கொள்கிறேன் நிர்வாகம் எடுக்கும் எத்தகைய முடிவுக்கும் நான் கட்டுப்படுவேன் என உறுதி அளிக்கிறேன் மன்னிப்பு கேட்டுள்ளார்.