மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சாலையில் உள்ள திருவள்ளுவர் சிலை அருகே ஆதித்தமிழர் கட்சியினர் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குறிப்பாக, எஸ்சி எஸ்டி இட ஒதுக்கீட்டை பகிர்ந்து கொடுக்கும் உரிமையை மாநில அரசுகளுக்கு வழங்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அதாவது, அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு செல்லும் என்கின்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை நாடு முழுவதும் உடனடியாக அமல்படுத்த வேண்டும், அருந்ததியர் இட ஒதுக்கீடு அருந்ததியர்களுக்கே என்பதற்கு எதிராக அமைந்துள்ள அரசாணையை ரத்து செய்ய வேண்டும், எதிர்காலத்தில் அருந்ததியர் இட ஒதுக்கீட்டை 6 சதவீதமாக உயர்த்த வேண்டும், எனவும், அரசியல் துறையில் உள்ள அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை விரிவுபடுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆதித்தமிழர் கட்சியின் நிறுவனத் தலைவர் கு. ஜக்கையன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக அருந்ததியர் இட ஒதுக்கீடு குறித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.