குடிபோதையில் வாலிபரை தாக்கிய நபர்கள் கைது.

66பார்த்தது
குடிபோதையில் வாலிபரை தாக்கிய நபர்கள் கைது.
மதுரை தெப்பக்குளம் பகுதியில் குடிபோதையில் வாலிபரை தாக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

மதுரை தெப்பக்குளம் சி. எம். ஆர். ரோடு ஹரிஜன் காலனியை சேர்ந்த செல்வத்தின் மகன் சூர்யா மூர்த்தி (24) என்பவர் ஐ. டி. ஐ. முடித்துவிட்டு மெக்கானிக்காகவும் வேலை பார்த்து வருகிறார். இவர் இரவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது வாலிபர்கள் சிலர் குடிபோதையில் இவர் வீட்டின் முன்பாக நின்று ஆபாசமாகவும் பேசிக்கொண்டிருந்தனர். இதை சூரிய மூர்த்தி தட்டி கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த
வாலிபர்கள் அவரை ஆபாசமாக பேசி உருட்டுக் கட்டையால் தாக்கியுள்ளனர்

இந்த சம்பவம் குறித்து சூரிய மூர்த்தி தெப்பக்குளம் போலீசில் புகார் செய்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தெற்கு வாசல் பூக்காரத் தெரு சீனிவாசன் மகன் ஆகாஷ் (21), சிஎம்ஆர் ரோடு சூர்யா (20), அதே பகுதியைச் சேர்ந்த செல்வ குமார் மகன் கௌதம் (20), போதகராஜ் மகள் அருண்பாண்டி (23) ஆகிய பேரையும் போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி