மதுரை நீர்வளத்துறையின்கீழ் பணிகளை செய்யும் ஒப்பந்தக்காரர்களிடம் பில் தொகை வழங்க கட்டாய வசூலில் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார் எழுந்தது. இதனையடுத்து மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் சத்தியசீலன் தலைமையில் ஆய்வாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் இன்று மாலை தல்லாகுளம் பகுதியில் அமைந்துள்ள பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் திடீரென சோதனை மேற்கொண்டனர்.
பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உள்ள வைகை விருந்தினர் இல்லத்தில் வரவேற்பறையில் கோப்புகளை பார்த்துக்கொண்டிருந்த பெரியாறு வைகை பாசன உபகோட்ட உதவி செயற்பொறியாளர் சையது கபீப் என்பவரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் (58)சோதனையில் ஈடுபட்டனர்
அப்போது அவர் வைத்திருந்த கவரில் இருந்தும் பையில் இருந்தும் கணக்கில் வராத ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 800ஐ பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் உதவி செயற்பொறியாளரிடம் விசாரணை நடத்தினர்.
முதற்கட்டமாக கைப்பற்றப்பட்ட பணமானது அவருடைய பணம்தானா? அல்லது ஒப்பந்தக்காரர்களிடம் இருந்து லஞ்சமாக பெறப்பட்டதா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் உதவி செயற்பொறியாளர் கபீப்பிடம் பல்வேறு ஆவணங்களின் அடிப்படையில் விசாரணையை தீவிரமாக நடத்தி வருகின்றனர்.