மதுரையில் தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி இன்று காலை கண்கவர் வண்ணம் நாயினங்கள் தோற்றமளித்தன.
மதுரை தமுக்கம் மைதானத்தில் குளிரூட்டப்பட்ட அரங்கில் இன்று மதுரை கெனய்ன் கிளப் சார்பில் தேசிய அளவிலான நாய் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் மதுரை, கோவை, கொடைக்கானல், திருச்சி உள்பட தமிழகம் மற்றும் தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து 353 நாய்கள் பங்கேற்றது.
கண்காட்சியில் பங்கேற்ற சிப்பிப்பாறை, கோம்பை, கன்னி, ராஜபாளையம், கட்டக்கால் உள்ளிட்ட பல்வேறு நாட்டின நாய்களுக்கு அதனதன் பிரிவுகளில் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன.
நடுவர்களாக ஜப்பான் மற்றும்
ஆஸ்திரேலியா சார்ந்தவர்கள் பங்கேற்று நாய்களின் உடல் தகுதி வயதுக்கேற்ப வளர்ச்சி நிறம் மற்றும் பராமரிப்பு அதன் அடிப்படையில் பரிசுகளை வழங்கினர்.
போட்டியில் கலந்துகொண்ட அனைத்து நாய்களுக்கும் சான்றிதழ் மற்றும் பரிசுக்கோப்பைகளும், தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த நாய்களுக்கு பரிசு கேடயங்களும் சான்றிதழும் வழங்கப்பட்டன.
மேலும் நாட்டின நாய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கண்காட்சி இந்த கண்காட்சியில் பங்கேற்ற சிறந்த நாட்டு நாய்களுக்கு இரண்டு கிராம் தங்கம் ஊக்க பரிசாக வழங்கப்பட்டது.