ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி

58பார்த்தது
ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று (செப்.,30) நடைபெற்ற குறைதீர்க்க கூட்டத்திற்கு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வருகை தந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு சோதனைக்கு பின்பாக தொடர்ந்து அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஏராளமான பொதுமக்கள் தொடர்ச்சியாக தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுவதன் காரணமாக இது போன்ற காவல்துறை சோதனை தீவிரபடுத்தப்பட்டது.

இந்நிலையில் காவல்துறையினர் சோதனை நடத்திக் கொண்டிருந்தபோது அங்கு வந்த மதுரை அவனியாபுரம் சேர்ந்த ராஜம்மாள் என்ற மூதாட்டி தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.

இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தினர் விசாரணை நடத்தினர். அப்போது நிலத்தை சிலர் தனது நிலத்தை அபகரிக்க முயன்றதாகவும் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில் இதுபோன்று செய்ததாக கூறினார். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென மூதாட்டி உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயற்சி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி