வாகன பேரணியில் உரையாற்றிய அமித்ஷா

54பார்த்தது
மதுரை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் ராம ஸ்ரீநிவாசனை ஆதரித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்ற வாகன பேரணி தொடங்கியது. நேதாஜி சாலை தொடங்கி தெற்கு ஆவணி மூல வீதி வழியாக விளக்குத்துண் வரையிலும் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற வாகன பேரணியின்போது வழிநெடுகிலும் இரு புறங்களில் சாலையோரம் நின்ற தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது கையில் தாமரை சின்னத்தை காண்பித்தபடி வெற்றியின் அடையாளமான இரு விரல்களை காண்பித்து தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.

இதனைத்தொடர்ந்து விளக்குத்தூண் பகுதியில் பேசிய அமித்ஷா:

இந்த மழை வெயிலிலும் கூட பாஜக வேட்பாளர் சீனிவாசனுக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்துள்ளீர்கள் அதற்காக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பாஜக மட்டும் தான் தமிழ் வளர்ச்சிக்கும் தமிழக வளர்ச்சியயின் மீதும் அக்கறை செலுத்தும் தமிழகத்தின் கௌரவத்தை இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் பறைசாற்றி கொண்டிருப்பவர் பிரதமர் மோடி.

தமிழில் பேச முடியவில்லை என்பதற்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அடுத்த தேர்தலில் உங்களிடம் தமிழில் பேசுவேன் என்றார்.

நீங்கள் தாமரைக்கு வாக்களிக்க வேண்டும். சொல்லுங்கள் பாரத்மாதாகி ஜே வந்தே மாதரம் என கூறி உரையை நிறைவு செய்தார்.


இதுவரை அமித்ஷா நடத்திய வாகன பேரணியின்போது மதுரையில் முதன்முறையாக பொதுமக்களிடையே உரையாற்றியது குறிப்பிடதக்கது.

தொடர்புடைய செய்தி