மதுரை மேலூர் மாவட்டம் கீழையூர், தனியாமங்கலம் , மாங்குளம், நாவினிபட்டி , நொண்டிகோவில்பட்டி , பல்லவராயன்பட்டி , சருகு வலையப்பட்டி , வடக்கு வலையப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் 900 ஏக்கர் பரப்பளவில் பயிரப்படப்பட்ட கரும்புகள் மும்பை, குஜராத், , கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளுக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விற்பனைக்காக அனுப்பி வைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.
மேலூர் கரும்புகள் அதிக இனிப்பு சுவையுடையது என்பதால் நாடு முழுவதிலும் பல்வேறு பகுதிகளில் மேலூர் கரும்புகளுக்கு வரவேற்பு உள்ள நிலையில் ஏராளமான தொழிலாளர்கள் கரும்புகளை வெட்டி லாரிகள் மூலமாக அனுப்பி வைத்து வருகின்றனர்.
கரும்பு விவசாயிகளிடம் இருந்து பொங்கல் பரிசு தொகுப்புக்காக ரேஷன் கடைகளுக்கு கரும்பு கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் அறிவிக்கப்பட்ட முழு தொகையும் கிடைக்காத நிலையில் அதிகாரிகளின் தலையீடுகளில் தொகை குறைந்துவருவதோடு, விவசாயிகளுக்கான பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக விவசாயிகள் குற்றச்சாட்டடு வைத்தனர்.
ஏக்கருக்கு 1. 5 லட்சம் ரூபாய் செலவு செய்து பயிரப்பட்ட நிலையில் போதிய லாபம் கிடைப்பதில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.