திருமலை நாயக்கர் மகால் அருகே மரம் வேரோடு சாய்ந்தது

1888பார்த்தது
மதுரை நகரில் இன்று மாலை பெய்த மழையின் போது பழமையான மரம் வேரோடு சாய்ந்தது.

மதுரை நகர் திருமலை நாயக்கர் மகால் அருகே பந்தடி 1 வது தெருவில் உள்ள மாநகராட்சி திருவள்ளுவர் உயர்நிலை பள்ளி முன் இருந்த வேப்பமரம் இன்று பெய்த மழையால் 7 மணியளவில் வேரோடு சாய்ந்தது. இதனால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்கள் சேதமடைந்தது. நல் வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மரத்தினை வெட்டி அப்புறப்படுத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் மின்சாரம் தடைபட்டது.

தொடர்புடைய செய்தி