தவறி விழுந்து மனவளர்ச்சி குன்றிய சிறுவன் உயிரிழப்பு

1118பார்த்தது
ரிசர்வ்லைன் பகுதியில் மழைநீர் சேகரிப்பு தொட்டியில் தவறி விழுந்து மனவளர்ச்சி குன்றிய சிறுவன் உயிரிழப்பு.


மதுரை ரிசர்வ்லைன் பகுதியில் மதுரை மாவட்ட ஆட்சியர் பங்களாவிற்கு பின்புறம் அன்பகம் மனவளர்ச்சி குன்றியோர்க்கான தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் 100க்கும் மேற்பட்ட மனவளர்ச்சி குன்றிய ஆதரவற்ற மாணவர்கள் தங்கி உள்ளனர்.

இந்த தங்கும் விடுதியில்  மதுரை மேலூர் தத்துப்பட்டியை சேர்ந்த சகோதரர்கள் ராமன் லெட்சுமணன் தங்கி உள்ளனர். இந்த நிலையில் வளாகத்தில் உள்ள மழைநீர்சேகரிப்பு தொட்டிக்குள் 10 வயதான சிறுவன் லெட்சுமணன் சிறுவர்களோடு விளையாடும் போது மழைநீர் சேகரிப்பு தொட்டிக்குள் விழுந்துள்ளார்.


மழைநீர் சேகரிப்பு தொட்டி அஜாக்கிரதை மற்றும் அலட்சியமாக திறந்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சிறுவன் எதிர்பாராத விதமாக 12 அடி ஆழமுள்ள தொட்டியில் விழுந்த நிலையில் சிறுவன் உயிரிழந்துள்ளார்.


இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறை சிறுவனின் உடலை மீட்டு அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி