மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஆறாம் நாளான இன்று சுவாமியும், அம்மனும் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்கம் மற்றும் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் ஆறாம் நாள் நிகழ்வில் சுவாமியும், அம்மனும் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்கம் மற்றும் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்கள். இதனையடுத்து, காலை மீனாட்சி அம்மன் கோயில் சிவகங்கை ராஜா மண்டகப்படியில் இருந்து சுவாமியும், அம்மனும் தங்கச் சப்பரத்தில் புறப்பட்டு நான்கு மாசி வீதிகளில் திருவீதிவுலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர், இரவு 7. 30 மணியளவில் மீனாட்சி அம்மன் கோயில் இருந்து சுவாமியும், அம்மனும் தங்கம் மற்றும் வெள்ளி ரிஷப வாகனத்தில் புறப்பட்டு மாசி வீதிகளில் திருவீதி உலா நிகழ்வு நடைபெற உள்ளது.