மதுரை: தேங்கிய மழைநீரில் சிக்கிக்கொண்ட கார்

1925பார்த்தது
மதுரை மாநகர் பகுதியில் கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த கனமழையானது செய்து வருகிறது. இந்த நிலையில் மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள வைகை ஆற்றை ஒட்டிய சாலையில் தாழ்வான பகுதியில் அதிகமான மழை நீர் முழங்கால் அளவிற்கு தேங்கியுள்ளது.

இந்த வழியாக வந்த கார் ஒன்று தண்ணீரில் சிக்கிக்கொண்டது. இதனால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஆபத்தை உணராமல் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியவாறு சென்று வருகின்றனர்.