எல்லைப் பாதுகாப்புப் படை வீரா் உயிரிழப்பு

69பார்த்தது
எல்லைப் பாதுகாப்புப் படை வீரா் உயிரிழப்பு
எல்லைப் பாதுகாப்புப் படை வீரா் உயிரிழப்பு

மதுரை தல்லாகுளம் ஆயுதப் படை காவலா் குடியிருப்பைச் சோ்ந்த செல்லதுரை மகன் ஆனந்தன் (36).

இவா் மதுரை இடையபட்டியில் உள்ள இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை பயிற்சி மையத்தில் ஹவில்தாராக பணியாற்றி வந்தாா். இவரது மனைவி சாந்தி (37). இவா் மதுரை மாநகா் ஆயுதப் படையில் முதல் நிலைக் காவலராகப் பணியாற்றி வருகிறாா்.

இந்த நிலையில், ஆனந்தன் வெள்ளிக்கிழமை வீட்டிலிருந்த போது தடுமாறி கீழே விழுந்தாா். இதையடுத்து, சொக்கிகுளத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் அங்கு உயிரிழந்தாா்.

இதுகுறித்து தல்லாகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தொடர்புடைய செய்தி