மதுரை: தமிழகத்தில் 2004 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை 20 ஆண்டுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் 5, 557 வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.
இதில் 3, 035 வழக்குகளில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது 1, 059 வழக்குகள் மீதி துறை ரீதியான நடவடிக்கைக்கும் 576 வழக்குகளில் தீர்ப்பாய ஒழுங்கு நடவடிக்கைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.