மதுரை குறவர் பழங்குடி மக்கள் குறித்து யூடியூப் சேனல்களுக்கு யூடியூப் பாண்டியன் அவதூறாக பேசியது கண்டித்தும் அவரை கைது செய்ய வலியுறுத்தியும் வனவிலங்குகள் கட்சி நிர்வாகிகள் மதுரை ஆட்சியர் அலுவலகம் முன்பாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாண்டியனுக்கு எதிராக கோஷமிட்டு அவர்கள் திடீரென அவரது உருவ பொம்மையை தீவைத்து எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது இதனால் போலீசார் போராட்டக்காரர்கள் 35 பேரை கைது செய்தனர்.