மதுரை: தென்னக ரயில்வே மதுரை கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நெல்லை- மேலப்பாளையம் இடையே இருவழிப்பாதை பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இன்று முதல் பிப்ரவரி 29 வரை 25 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
தூத்துக்குடியில் இருந்து இரவு 10. 30 மணிக்கு புறப்படும் வாஞ்சி மணியாச்சி எக்ஸ்பிரஸ் நெல்லையிலிருந்து காலை 7 25 மணிக்கு திருச்செந்தூர் செல்லும் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் ரத்தாகிறது என தென்னக ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.