வாடிப்பட்டி: சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

56பார்த்தது
வாடிப்பட்டி: சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் இன்று (ஏப். 16) காலை வாடிப்பட்டி பேருந்து நிலையம் மற்றும் மெயின் ரோட்டில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை காவல்துறை உதவியுடன் நெடுஞ்சாலை துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் அகற்றினார்கள். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. சில கடை உரிமையாளர்கள் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அகற்றப்படாத ஆக்கிரமிப்புகளை ஜே.சி.பி. கொண்டு அப்புறப்படுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி