மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் பலமுறை வீட்டுமனை பட்டா கேட்டு போராடிய பொதுமக்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு குடியேறும் போராட்டத்தை ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக அரசே மாவட்ட நிர்வாகமே வாடிப்பட்டி வட்டாட்சியரே கொண்டையம்பட்டி கிராமத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மக்களுக்கு குடியிருப்பதற்கு வீடு இல்லை என்று வீட்டுமனை பட்டா கொடுக்காமல் மூன்று ஆண்டுகளாக அதிகாரிகளை சந்தித்தும் பட்டா கிடைக்கவில்லை.
இன்று (டிசம்பர் 30) வாடிப்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வாடிப்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு அமர்ந்து வீடில்லாத கொண்டையம்பட்டி பொதுமக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பொதுமக்களுடன் கம்யூனிஸ்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் வாடிப்பட்டி தொடர்ந்து பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.