மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதியில் உள்ள வாடிப்பட்டியில் நேற்று (மார்ச் 20) இரவு மதுரை வடக்கு மாவட்ட
திமுக இளைஞரணி சார்பாக நிதி பகிர்வு, தொகுதி மறுசீரமைப்பு பிரச்சனைகள் குறித்து மத்திய அரசை கண்டித்து பொதுக்கூட்டம் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் சிறப்பு உரையாற்றினார். இந்நிகழ்வில் சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன் உள்ளிட்ட
திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்