மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பாக நெடுங்குளம் கிராம நிர் வாக அலுவலர் முத்துராமலிங்கத் திற்கு பணி ஓய்வு பாராட்டு விழா சங்க வளாகத்தில் நடைபெற்றது.
இந்த விழாவிற்கு சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பார்த்திபன் தலைமை தாங்கினார். மண்டல துணை தாசில்தார் பிபின் சுபாஷ்முன்னிலை வகித்தார். வருவாய் ஆய்வாளர் கௌதமன் வரவேற்றார். இந்த விழாவில் வருவாய் ஆய்வாளர் ராஜா, மாவட்ட பொருளாளர் முத்துக்குமார், வட்ட தலைவர் செந்தில் குமார், வட்ட செயலாளர் மணிவேல், வட்ட பொருளாளர் கார்த்திக் மற்றும் தமிழ்நாடு கிராம
உதவியாளர்கள் சங்க நிர்வாகி ராமகிருஷ்ணன், தமிழ்நாடு வருவாய் அலுவலர்கள் சங்க எஸ். சி. பிரிவு மாநிலச் செயலாளர் ஹரிராம் குருவித்துறை கிராம நிர்வாக அலுவலர் முபாரக் ஆகியோர் வாழ்த்தி
பேசினார்கள்.
இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண் டனர். முடிவில் கிராம நிர்வாக அலுவலர் முத்துராமலிங்கம் - ஏற்புரையுடன் நன்றி கூறினார்.