குலசேகரன் கோட்டையில் சோக சம்பவம் - மின்சாரம் தாக்கி பசு பலி

59பார்த்தது
குலசேகரன் கோட்டையில் சோக சம்பவம் - மின்சாரம் தாக்கி பசு பலி
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா, குலசேகரன் கோட்டை கிராமத்தில் உள்ள பெருமாள் கண்மாயில் நேற்று சோக சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அறுந்து விழுந்த மின் கம்பியால் பசு மாடு ஒன்று உயிரிழந்துள்ளது. 

கிராமத்தில் உள்ள பெருமாள் கண்மாயின் அருகே அமைந்துள்ள மின் கம்பத்தில் இருந்து மின் கம்பி அறுந்து கீழே விழுந்து கிடந்தது. இந்த சம்பவம் குறித்து தெரியாமல், அப்பகுதியில் மேய்ச்சலுக்கு 200-க்கும் மேற்பட்ட கறவை மாடுகள் கொண்டு செல்லப்பட்டன. இந்த நிலையில், போடிநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தங்கமணி என்பவரின் பசு மாடு அறுந்து கிடந்த மின் கம்பியில் தற்செயலாக உரசி விட்டது. இதில் மின்சாரம் தாக்கியதால் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. 

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த குலசேகரன் கோட்டை கிராம நிர்வாக அலுவலர் முத்துக்கருப்பன் மற்றும் கிராம நிர்வாக உதவியாளர் வளர்மதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர், மாட்டின் உரிமையாளருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டது. பின்னர், மாட்டின் உரிமையாளர் பசுவின் உடலை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார். 

சோழவந்தான் இந்த சம்பவம் குறித்து கிராம மக்கள் பெரும் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க, மின் கம்பிகளை சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி