ஓட்டுநர், நடத்துநரிடம் தகராறில் ஈடுபட்டவர்கள் கைது.

53பார்த்தது
ஓட்டுநர், நடத்துநரிடம் தகராறில் ஈடுபட்டவர்கள் கைது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரிடம் தகராறில் ஈடுபட்ட நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

மதுரை ஆரப்பாளையத்திலிருந்து நேற்று முன்தினம் இரவு சோழவந்தான் வழியாக நிலக்கோட்டைக்கு அரசு பேருந்து சென்றது.
பேருந்தினை வத்தலகுண்டு ஆண்டிபட்டியை சேர்ந்த சண்முகவேல் (40) ஓட்டினார்.

இந்நிலையில் கருப்பட்டி அருகே போதையில் இருசக்கர வாகனத்தில் வந்து பஸ்சை மறித்த மூன்று வாலிபர்கள் ஓட்டுநர் சண்முகவேல், மற்றும் நடத்துநர் சரவணனுடன் தகராறு செய்து தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து சோழவந்தான் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
கருப்பட்டி விக்னேஷ், அம்மச்சியாபுரம் முனியாண்டியை கைது செய்து மதன்பாபுவை சோழவந்தான் போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி