மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் திரளாக வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில்
பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் வெற்றிக்காக, அலங்காநல்லுார் தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் உள்ள ஹயக்ரீவர், சரஸ்வதி தேவிக்கு சிறப்பு யாகம் நடைபெற்றது. சுவாமிக்கு பேனா மாலையை மாணவர்கள் பலர் அணிவித்து தரிசனம் செய்தனர்.
முன்னதாக புனிதநீர் குடங்களுக்கு தீபாராதனை சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. வேத மந்திரங்கள் முழங்க யாக வேள்வியும், பூர்ணாகுதி பூஜை வழிபாடு செய்தனர்.
சுவாமி அம்மனுக்கு இளநீர், தயிர் உள்ளிட்ட 16 வகை அபிஷேகம், மலர்களால் அலங்காரம் நடைபெற்றது. பள்ளி, கல்லுாரி மற்றும் போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர்.