அலங்காநல்லூர் அருகே பாடு விழுதல் விழா.

62பார்த்தது
அலங்காநல்லூர் அருகே பாடு விழுதல் விழா.
மதுரை மாவட்டம் அலங்காநல்லுார் அருகே முடுவார்பட்டி மற்றும் ஆதனுாரில் காமாட்சி அம்மன், காஞ்சரடி, கழுவடி சுவாமிகள் கோயில் உற்சவம் கடந்த மே 30 தொடங்கியது.

சால்வார்பட்டி அரண்மனையாரிடம் கம்பு வாங்கியும், ஆதனுார் காமாட்சி அம்மன் கோயிலில் பெட்டி அழைத்து வந்தனர். மரங்குனி ஆற்றுக்கு சென்று சாமியாடிகள் தீர்த்தமாடினர். காரான்கள அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் ஆராதனைகளும் ஒரு பட்டசாமியாடி பாடு விழுதல் துவங்கியது.
ஜூன் 7 சடச்சியம்மன் கோயிலில் முகூர்த்தக்கால் ஊன்றப்பட்டது.

இந்நிலையில் நேற்று அதிகாலை 2: 00 மணிக்கு அம்மன் கரகம் கழுவடி கோயிலுக்கு அழைத்து வந்து சுவாமிக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர்.

அதனை தொடர்ந்து கிடா வெட்டி கழுவடி கோயில் முன் உள்ள படுகளத்தில் 9 சாமியாடிகள் பாடு விழுதல் விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி