வாடிப்பட்டி வாலிபர் தற்கொலைக்கு எஸ்.ஐ காரணமா?

7122பார்த்தது
வாடிப்பட்டி வாலிபர் தற்கொலைக்கு எஸ்.ஐ காரணமா?
மதுரை வாடிப்பட்டி அருகே இளைஞர் தூக்கிட்டு நேற்று தற்கொலை செய்து கொண்டார்

மதுரை வாடிப்பட்டி அருகே கச்சை கட்டி பசும்பொன் நகரை சேர்ந்த முருகனின் மகன் ராம்கி( 23) என்பவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த எட்டாம் தேதி இரவில் ராம்கியிடம் பழைய பிரச்சனையை மனதில் வைத்துக் கொண்டு கச்சைகட்டியை சேர்ந்த ஜான் முருகன், அதிபன் ஆகியோர் ஊர் மந்தையில் வைத்து ராம்கியை அடித்துள்ளனர். அங்கு வந்த சப் இன்ஸ்பெக்டர் முருகேசன் முறையாக விசாரிக்காமல் ராம்கியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லாமல் ஜான் முருகன் அதிபன் ஆகியோருடன் சேர்ந்து அடித்துள்ளார்.

இதனால் ராம்கி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான் என்று அவரது தாய் வாடிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ராம்கியின் உறவினர்கள் வாடிப்பட்டி அரசு மருத்துவமனை முன்பு முற்றுகையிட்டு தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வாடிப்பட்டி பேருந்து நிலையம் முன்பு மறியல் செய்தனர். தற்கொலைக் காரணம் என்று மூவரின் பெயரை எழுதி வைத்து ராம்கி தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது.

மதுரை மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் கருப்பையா தலைமையில் சமயநல்லூர் காவல்துணை கண்காணிப்பாளர் பாலசுந்தரம் ஆகியோர் ராம்கியின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு ராம்கியின் உடலை பெற்றோரும் நேற்று இரவு வாங்கி சென்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி