பெரியாறு பாசன கால்வாயினை சீரமைக்க கோரிக்கை.

250பார்த்தது
பெரியாறு பாசன கால்வாயினை சீரமைக்க கோரிக்கை.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் நேற்று மூவேந்தர் முன்னேற்ற கழக மதுரை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு மாவட்டசெயலாளர் செந்தில்பாண்டி தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் மருதுபாண்டியன் முன்னிலை வகித்தார். மாநிலபொருளாளர் கே. என். நாகராஜன், தென்மண்டலதலைவர் குஷின் செந்தில், மாவட்டதலைவர் எம். கே. கணேசன் ஆகியோர் பேசினார்கள்.

இந்த கூட்டத்தில் சிறுமலை வனப்பகுதியில் தெத்தூர் கரடிக் கல்லில் வனவிலங்கு பாதுகாப்பு கருதி மதுரை மத்திய சிறைச்சாலை அமைக்ககூடாது என்றும், அந்த நிலங்களை பயன்படுத்தி வந்த விவசாயிகளுக்கு உடனே பட்டா வழங்க வேண்டும்.
சாத்தையாறு அணையை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என்றும், பருவமழை வருவதையொட்டி மழைநீர் சேகரிக்க ஏரி, கண்மாய், குளங்களில். சீமைக்கருவேல முட்களை அகற்றி சட்டர்களை பழுது பார்த்து கரைகளை உயர்த்தி சீரமைக்க வேண்டும். பெரியாறு பாசன கால்வாயினை இருபோக சாகுபடி தண்ணீர் வருவதற்குள் மராமத்து பார்த்து சீரமைக்கவேண்டும் உள்ளிட்டபல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி