கலைஞர் கனவு திட்ட வீடுகளை ஒதுக்க கோரிக்கை.

57பார்த்தது
கலைஞர் கனவு திட்ட வீடுகளை ஒதுக்க கோரிக்கை.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கிராமத்தினர் கலைஞர் கனவு திட்ட வீடுகளை ஒதுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே, கோவில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வடக்கு தெரு பேச்சி அம்மன் கோவில் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடு வழங்க கோரி அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த ஊராட்சியில், மொத்தம் எட்டு வார்டுகள் உள்ள நிலையில் 3000 திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஆதி திராவிடர் குடியிருப்பு பகுதியில் 50 வருடங்களுக்கு மேலாக வீட்டுமனை இல்லாமல் குடிசை வீடுகளிலும் பராமரிப்பு இல்லாத ஓட்டு வீடுகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். இவர்கள், அலங்காநல்லூர் யூனியன் அலுவலகம் மற்றும் வாடிப்பட்டி தாலுகா அலுவலகம் ஆகியவற்றில் வீட்டுமனை மற்றும் வீடு கட்டுவதற்கான உதவிகள் கேட்டு பலமுறை மனு அளித்தும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால், தற்போது தமிழக முதல்வர் அறிவித்துள்ள கலைஞர் கனவு இல்ல வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீட்டு மனை ஒதுக்க வேண்டுமென, கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி