மருத்துவமனையில் பணியாளர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதி.

76பார்த்தது
மருத்துவமனையில் பணியாளர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதி.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு மருத்துவமனையில் பணியாளர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு
மருத்துவமனைக்கு சோழவந்தான் உள்பட இதனை சுற்றியுள்ள
மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இங்கு டாக்டர் மற்றும் பணியாளர்கள் போதுமான அளவில் இல்லாததால், தினசரி இங்கு வரக்கூடிய நோயாளிகளை வேறு மற்றும் தனியார் மருத்துவமனையில் செல்ல சொல்லி கூறுவதால், நோயாளிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

தங்களுக்கு ஏற்பட்ட நோய்களை மருத்துவர்களிடம் காண்பித்து, சிகிச்சை பெற்று நோயிலிருந்து குணமடைவோம் என்று, சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு வரக்கூடிய நோயாளிகள் மனவேதனையில் இங்கிருந்து திரும்பி வாடிப்பட்டி, மேலக்கால், மன்னாடிமங்கலம், மதுரை போன்ற அரசு மருத்துவமனைக்கு செல்கின்றனர்.

இங்கு போதுமான டாக்டர்கள், பணியாளர்கள் இல்லாமல், இங்கு
வரக்கூடிய நோயாளிகளுக்கு முறையாக சிகிச்சை அளிக்காமல் அனுப்பக் கூடிய அவல நிலை இங்கு உள்ளது.

இங்கு பணியாற்றக் கூடிய பணியாளர் சிலர் வரக்கூடிய நோயாளிகளை எரிந்து விழுவதும், தனக்கென்று அதிகாரத்தில் வாய்க்கு வந்தபடி திட்டுவதால் , மனநோந்து நோயாளிகள் சிகிச்சை பெறாமலே வெளியே செல்கின்றனர்.

எனவே உரிய பணியாளர்களை நியமித்து ஏழை மக்களின் உடல் நலத்தில் அக்கறை கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி