மதுரை மாவட்டம் சோழவந்தான் வனச்சரக பகுதியில் உள்ள குட்லாடம்பட்டி பகுதியில் டிரெக்கிங் செல்ல முன் அனுமதி பெற்று செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட வனத்துறை சார்பில் வாடிப்பட்டி அருகே உள்ள குட்லாடம்பட்டியிலிருந்து நடுவனார் வரை டிரெக்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. சோழவந்தானுக்கு உட்பட்ட சிறுமலை வனப்பகுதியில் தொடங்கி கொடிமங்கலம் வரை 16 கிலோ மீட்டருக்கு மேல் ட்ரக்கிங் செய்யலாம். வழியில் காட்டெருமைகள், மான் வகைகள், அரியவகை பறவைகள், மரங்கள், அருவி, வண்ணத்துப்பூச்சிகளை காணலாம்.
ட்ரெக்கிங் செல்ல விரும்புவோர் மதுரை சோழவந்தான் வனச்சரக அலுவலகத்திலோ ரேஸ்கோர்ஸ் மாவட்ட வன அலுவலகத்திலோ அனுமதி பெற வேண்டும். நம்முடன் வனத்துறை அதிகாரி வழி காட்டலுக்கு வருவார்கள். அனுமதி படிவம் பெற்ற பின் 'ட்ரெக்கிங்' செல்லலாம்.