கர்ப்பிணி பெண் இறப்பில் மர்மம்; போலீஸ் விசாரணை

1078பார்த்தது
கர்ப்பிணி பெண் இறப்பில் மர்மம்; போலீஸ் விசாரணை
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே காதல் திருமணம் செய்து கர்ப்பிணியான தனது மகளின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகேயுள்ள திருவாலவாயநல்லூ ரைச் சேர்ந்த முருகேசனின் (60) மகள் போதும்பொன்னு (23). இவர் சமயநல்லூர் பர்மா குடியிருப்பைச் சேர்ந்த வேறு சமூகத்தைச் சேர்ந்த பாலகுமாரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

பின்னர் போதும் பொன்னு பர்மா குடியிருப்பில் கண வர், அவரது தாயுடன் வசித்து வந்தார். பாலகுமார், அவரது தாய் ஆகியோர், போதும் பொன்னுவை அடிக்கடி திட்டி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், 2 மாத கர்ப்பிணியான போதும்பொன்னு, தனது கணவரின் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து முருகேசன் சமயநல்லூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், தனது மகளை கணவர் குடும்பத்தினர் திட்டி கொடுமைப்படுத்தி வந்ததாகவும், அவரது இறப்பில் மர்மம் இருப்பதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி