மேலக்கால்: புதிய டாஸ்மார்க் எதிர்ப்பு பொதுமக்கள் போராட்டம்

73பார்த்தது
மேலக்கால்: புதிய டாஸ்மார்க் எதிர்ப்பு  பொதுமக்கள் போராட்டம்
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா, மேலக்கால் கிராமத்தில் புதிய டாஸ்மாக் கடை அமைக்கப்படுவதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த கிராமத்தில் அரசு பள்ளி மற்றும் தனியார் கல்லூரி இருப்பதால், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இந்த பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்தால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் எனவும், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலன் பாதிக்கப்படும் எனவும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். 

இதற்கு முன்னரும் இந்த இடத்தில் டாஸ்மாக் கடை அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். தற்போது மீண்டும் டாஸ்மாக் கடை அமைக்கப்படுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுவதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்தி