நியாய விலை கடைக்கு சென்றவர் மாயம்.

75பார்த்தது
நியாய விலை கடைக்கு சென்றவர் மாயம்.
மதுரை அருகே நியாய விலை கடைக்கு சென்ற கணவனை காணவில்லை என்று மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மதுரை வாடிப்பட்டி அருகே எல் புதூர் கிராமத்தில் வசிக்கும் செல்வராஜ் மகன் அசோக் குமார் (35) என்பவர் கடந்த 24ஆம் தேதி நியாய விலை கடைக்கு செல்வதாக கூறிச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என்றும் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் நேற்று அவரது மனைவி ரம்யா வாடிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி