ஜெனக நாராயண பெருமாள் திருகல்யாண வைபவம்

344பார்த்தது
ஜெனக நாராயண பெருமாள் திருகல்யாண வைபவம்
மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவிலில் நேற்று திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது.

இந்த விழாவை முன்னிட்டு மேளதாளத்துடன் பெண்கள் சீர்வரிசை எடுத்து 4 ரத வீதிகளில் வலம் வந்து கோவிலில் உள்ள மண்டபத்தை அடைந்தனர். இங்கு ஜெனகநாராயண பெருமாளும், ஸ்ரீதேவி, பூதேவி மேளதாளத்துடன் அழைத்து வந்தனர். யாகவேள்வி நடந்தது. பின்னர் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது

இதைத் தொடர்ந்து ஊஞ்சலாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்கள் அனைவருக்கும் திருமாங்கல்ய பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு கருடாழ்வார் வாகனத்தில் சுவாமியின் வீதியுலா நடைபெற்றது. நேற்று 3 வது புரட்டாசி சனிக்கிழமை என்பதால் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி