மின்சாரம் தாக்கியதில் பெண் கூலித் தொழிலாளி பலி.

65பார்த்தது
மின்சாரம் தாக்கியதில் பெண் கூலித் தொழிலாளி பலி.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மின்சாரம் தாக்கியத்தில் கூலித் தொழிலாளி பலியானார்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே பாலகிருஷ்ணபுரம் திடீர் நகர் பகுதியை சேர்ந்த தவமணியின் மனைவி மாரியம்மாள் (52) என்பவர் விவசாய தினக்கூலி வேலை பார்த்து வந்தார்.

இவர் கடந்த 1 ம்தேதியன்று வைகை வடகரையோரம் உள்ள சுரேஷ்நாயுடுவுக்கு சொந்தமான தென்னந்தோப்பில் வேலை பார்த்து வந்தபோது மின்சாரம் தாக்கியுள்ளது.

இதனால் பலத்த காயமடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து சோழவந்தான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி