மேட்டு நீரேத்தானில் துர்க்கையம்மன் கோவில் திருவிழா.

72பார்த்தது
மேட்டு நீரேத்தானில் துர்க்கையம்மன் கோவில் திருவிழா.
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே மேட்டு நீரேத்தானில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன் திருக்கோவில் 220 ஆம் ஆண்டு திருவிழா கடந்த 29ஆம் தேதி சாமி சாட்டுகளுடன் தொடங்கியது. தொடர்ந்து, கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகம் மற்றும் தாமிர கவசம் சாத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

கடந்த 3ஆம் தேதி திங்கட்கிழமை சந்தன காப்பு அலங்காரம் பூச்சொரிதல் விழா நடைபெற்றது.

மதியம் அன்னதானம் 4ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை, துர்க்கை அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி நீரேத்தான் கிராமத்தில் இருந்து மேட்டு நீரேத்தான் கிராமத்தில் எழுந்தருளினார்

நேற்று மாலை மேட்டு நீரேத்தான் மந்தையிலிருந்து ஏராளமான பெண்கள் தீச்சட்டி ஏந்தி கோவிலுக்கு வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.
Job Suitcase

Jobs near you